நடிகர் ரிச்சர்ட் ரிஷியுடன் கை கோர்க்கும் மோகன் ஜி..!!

 
1

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்து தற்போது வெளியான படம் ‘பகாசூரன்‘.  இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மோகன் ஜி இயக்கத்தில் ‘பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ‘ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மோகன்.ஜி தனது அடுத்தப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “இவர் யார் எனத் தெரிகிறதா? காசி கங்கா ஆர்த்தியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி. அப்புறம், முக்கியமான செய்தி….என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் தான். இதற்கான அறிவிப்பு விரைவில்….“ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஏற்கனவே மோகன்ஜி இயக்கத்தில் ‘திரௌபதி, ருத்ர தாண்டவம்‘ படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web