லூசிஃபர் ரீமேக்கை கைவிடும் முடிவில் சிரஞ்சீவி- காரணம் மோகன் ராஜா தான்..!

 
மோகன் ராஜா மற்றும் சிரஞ்சீவி

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ‘லூசிஃபர்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்கும் முடிவில் இருந்து சிரஞ்சீவி பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் ‘லூசிஃபர்’. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் பட தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழிலும் வெளியான இந்த படம் இங்குள்ள ரசிகர்களிடமும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. அதை தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க முடிவு செய்தார். இயக்குநராக மோகன் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்திற்கான பூஜை பணிகள் கடந்த ஜனவரி மாதம் போடப்பட்டது.

மஞ்சு வாரியார் வேடத்தில் நடிப்பதற்காக நயன்தாராவிடம் படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தொடர்ந்து படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கிய நிலையி, இயக்குநர் மோகன்ராஜா படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது.

அவர் உருவாக்கிய திரைக்கதை சிரஞ்சீவிக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் இருந்து மோகன் ராஜா வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் இந்த படத்தை உருவாக்கும் முயற்சியை சிரஞ்சீவி கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் தயாரிப்பாளரான ராம் சரண், லூசிஃபர் தெலுங்கு ரீமேக் உரிமையை மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

From Around the web