சிரஞ்சீவி படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து விலகினார் மோகன் ராஜா...?

 
சிரஞ்சீவி படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து விலகினார் மோகன் ராஜா...?

தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்த மோகன் ராஜா அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் மோகன்லால், ப்ரித்விராஜ் மற்றும் மஞ்சுவாரியார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘லூசிஃபர்’. நிழல் உலக தாதவாக இந்த படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். அவருடைய தங்கை வேடத்தில் மஞ்சு வாரியார் நடித்தார்.

கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழ் நாட்டிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சுவாரியார் வேடத்தில் நயன்தாரா நடிப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கடந்த ஜனவரி மாதமே இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டது. ஆனால் ஷூட்டிங் தொடங்கப்படமாலேயே இருந்தது. சிரஞ்சீவி ஆச்சர்யா படத்தில் நடித்து வருவதால், அதனுடைய படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக்கில் அவர் நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை இயக்கவிருந்த மோகன் ராஜா அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி சிரஞ்சீவி வலியுறுத்தியதாகவும், அதற்கு இணங்க மறுத்து மோகன் ராஜா படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா தயாரிக்கிறார். அதனால் சிரஞ்சீவி மகனுடன் ஆலோசித்து விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web