80 வயது மூதாட்டிக்கு ஸ்வீட் சர்பரைஸ் கொடுத்த மோகன்லால்..!

 
நடிகர் மோகன்லால்

அழுதபடி வீடியோ வெளியிட்டு சமூகவலைதளங்களில் வைரலான 80 வயது மூதாட்டியின் கோரிக்கையை நடிகர் மோகன்லால் நிறைவேற்றி வைத்துள்ளார்.

கேரளாவிலுள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருபவர் 80 வயதான ருக்குமணி பாட்டி. நடிகர் மோகன்லால் தீவிர ரசிகையான இவர் அழுதபடி பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. மோகன்லால் பெயரை வைத்து பலர் என்னை கிண்டல் செய்கின்றனர். அதனால் அவரை நான் பார்க்க வேண்டும், சந்திக்க வேண்டும் என வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த தகவல் மோகன்லால் தெரியவந்ததை அடுத்து, உடனடியாக தன்னுடைய போனில் ருக்குமணிக்கு பாட்டிக்கு வீடியோ காலிங் செய்துள்ளார். மோகன்லாலை போனில் பார்ப்பது குறித்து ஆச்சர்யமடைந்த பாட்டி, அவரிடம் நிறைய விஷயங்களை பேசினார்.

மேலும் கொரோனா காரணமாக நேரில் சந்திக்க முடியவில்லை. இந்த அச்சுறுத்தல் முடிந்த பிறகு நிச்சயம் நேரில் வந்து சந்திப்பதாக ருக்குமணி பாட்டிக்கு மோகன்லால் வாக்குறுதி அளித்தார். ரசிகையின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த மோகன்லாலுக்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
 

From Around the web