தமிழுக்கு வரும் மோகன்லால் வீட்டு மருமகன்..!!

மோகன்லாலின் மகன் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் நிலையில், அவருடைய தங்கை மகன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.
 
mohanlal

மலையாளப் படங்களில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் நடிகர் மோகன்லால். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்துடன் இணைந்து ’ஜெயிலர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன்காரணமாகவே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இவருடைய மகன் பிரணவ் மோகன்லால், மலையாளப் படங்களில் நடித்து வளர்ந்து வரும் ஹீரோவாக உள்ளார். இவருடைய நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான ‘ஹிருதயம்’ படம் மலையாள சினிமாவுக்கு பிறகு தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

pranav mohanlal

இதையடுத்து மோகன்லாலின் உடன்பிறந்த தங்கை மகனாக நிகிலும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் என பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார்.

இவர் முதன்முறையாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்தை தொட்டி ஜெயா, சக்கரைக்கட்டி, என்னோமோ நடக்குது போன்ற படங்களில் இணைய இயக்குநராக இருந்த ஜூட் ரோமாரிக் இயக்குகிறார்.

nikhil

நகைச்சுவை பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன. அதுதொடர்பான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

From Around the web