அடுத்தடுத்து ஓ.டி.டி-யில் வெளியாகும் மோகன்லாலின் 5 படங்கள்..!

 
மோகன்லால் படங்கள்

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ஐந்து படங்கள் அடுத்தடுத்து நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருப்பவர் மோகன்லால். கால் நூற்றாண்டுக்கும் மேலாக மலையாள் சினிமாவின் உச்சநட்சத்திரமாக உள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திப் படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ரூ.100 கோடி செலவில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’. திரையரங்க வெளியீட்டு முயன்று முடியாமல் போக, தற்போது படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்படுகிறது.

இதுதவிர ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் மோகன்லால் நடித்து வரும் ‘புரோ டாடி’, ‘டுவெல்த் மேன்’, ‘அலோன்’ மற்றும் புலிமுருகன் இயக்குனர் இயக்கும் படம் என மேலும் 4 படங்களையும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

மோகன்லால் படங்கள் திரையரங்குகளில் அடுத்தடுத்து வெளியாவது மலையாள சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் தரப்பு, தியேட்டர்களில் திரையிட்டு 21 நாட்களுக்கு பிறகு ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் அனுமதி கேட்டதாகவும், திரையரங்கு உரிமையாளர்கள் அதனை ஏற்காமல் 80 நாட்களுக்கு பிறகே ஓடிடி-க்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால் தியேட்டருக்கு பதிலாக ஓடிடி-யில் வெளியிடும் முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
 

From Around the web