ஆதிபுருஷ் படம் பார்க்க வந்த குரங்கு- தியேட்டரில் ஆர்பரித்த ரசிகர்கள்..!!
ராமயானக் கதையை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. பிரபாஸ், கீர்த்தி சனோன், சயீஃப் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.
டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ளது. தெலுங்கு, இந்தியில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் இப்படம் வெளியாகியுள்ளது.
Hanuman watched #Adipurush FDFS. pic.twitter.com/YOtmn0q65M
— LetsCinema (@letscinema) June 16, 2023
திரையரங்குகளில் ஆதிபுருஷ் படத்தை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென தியேட்டருக்குள் குரங்கு ஒன்று வந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் பாடலை பாடி ஆரவாரம் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ஆதிபுருஷ் படக்குழு, படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் கடவுள் ஆஞ்சநேயருக்கு வேண்டி ஒரு இருக்கை காலியாக விடப்படும் என அறிவித்திருந்தனர். அதனால் குரங்கு வந்தவுடன் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினர்.