அம்மாவான நடிகை காஜல் அகர்வால்..!
 

 
காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவில் த்ரிஷா மற்றும் நயன்தாராவை தொடர்ந்து காஜல் அகர்வாலும் ஒரு சிறுமிக்கு மகளாக நடிக்கவுள்ள விபரம் தெரியவந்துள்ளது.

திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் காஜல் அகர்வால். அந்த வகையில் அரசியல் காமெடிப் படமாக தயாராகியுள்ள ‘கோஷ்டி’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் காஜல்.

அதை தொடர்ந்து தெலுங்கில் ஆச்சார்யா, ஹேய் சினாமிகா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இநிந்லையில் புதியதாக தயாராகவுள்ள ‘ரவுடி பேபி’ என்கிற படத்தில் நடிப்பதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் ஒரு சிறுமிக்கு அம்மாவாக காஜல் நடிக்கவுள்ள விபரம் தெரியவந்துள்ளது. சிறுமி மற்றும் காஜலை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ள விபரம் தெரியவந்துள்ளது. 

மேலும் இந்த படத்தில் சத்யா ராஜ், ரம்யா கிருஷ்ணன், ராய்லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவுடி பேபி படத்தை ராஜா சரவணன் என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் தயாராகவுள்ள ‘உமா’ என்கிற படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். திருமணத்தை தொடர்ந்து பல மொழிகளில் பிஸியாக அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுள்ளன. எல்லாம் கணவர் வந்த ராசி என்கிற மகிழ்ச்சியில் இருக்கிறார் காஜல்.
 

From Around the web