‘நான் கடவுள் இல்லை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு..!!

 
1

நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’.

இதில் சமுத்திரகனி சிபிசிஐடி அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாகை சூடவா, மௌனகுரு படத்தில் நடித்த நாயகி இனியா நடிக்க மற்றும் ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார்.

ஓய்வு பெற்ற வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகரரும், அழுத்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியும், ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவனும் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் துணிச்சல் மிக்க இளைஞனாக அபி சரவணனும் அவருக்கு ஜோடியாக இளம் நாயகியாக அறிமுகமாகிறார் ப்ரியங்கா. சமுத்திரகனியின் தாயாக மதுரையை சேர்ந்த மாயக்கா நடிக்கிறார். சமுத்திரகனியின் மகள்களாக டயாணா ஸ்ரீ மற்றும் ஷாஷாவும் நடித்திருக்கிறார்கள், இவர்களின் கதாபாத்திரங்கள் பலர் மனதில் நீங்காமல் இடம் பிடிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நகைக்சுவை கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சியும், ‘சூப்பர் ஜீ’ புகழ் முருகானந்தமும் நடிக்கிறார்கள்.

மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் புகழ் சித்தார்த் விபின் இசையமைக்க, படத்தொகுப்பை பிரபாகரனும், கலையை வனராஜூம் கவனிக்கிறார்கள்.

இந்நிலையில், ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் மோஷன் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்துள்ளார்.


 

From Around the web