ஊரடங்கை மீறி நடக்கும் திரைப்பட ஷூட்டிங்க்: பிரபல சீரியல் நடிகை புகார்..!

 
ஊரடங்கை மீறி நடக்கும் திரைப்பட ஷூட்டிங்க்: பிரபல சீரியல் நடிகை புகார்..!

ஊரடங்கு விதிகளை மீறி தமிழகத்தில் திரைப்பட ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வெண்டும் என நடிகை சாந்தினி புகார் தெரிவித்துள்ளார்.

தமிழில் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான ‘சித்து +2’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சாந்தினி. அதை தொடர்ந்து கவண், கட்டப்பாவ காணோம், வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு சினிமாவில் சரியாக வாய்ப்பு அமையதாக காரணத்தால் விஜய் டிவி-யில்  சீரியல்களில் நடித்து வருகிறார்.

கொரோனா பாதிப்பை குறைக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளன. அத்தியாவசப் பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி கிடையாது. மேலும் மதியம்12 மணிக்கு மேல் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை சாந்தினி ஊரடங்கு விதிகளை மீறி திரைப்பட படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலினிடம் ட்விட்டர் மூலம் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், முழு ஊரடங்கு அமலில் இருக்கும் போது சென்னையின் பல்வேறு இடங்களில் மறைமுகமாக ஷூட்டிங் பணிகள் எதற்காக நடந்து வருகிறது?  மக்களின் உயிர்தான் எல்லாவற்றையும் விட முக்கியம். அதனால் இந்த விவகாரத்தில் உடனடியாக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web