பிரபல நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி மரணம்- திரையுலகத்தினர் இரங்கல்..!

 
பிரபல நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி மரணம்- திரையுலகத்தினர் இரங்கல்..!

தமிழ் சினிமாவில் துணை நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐயப்பன் கோபி, கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி தற்போது தெரியவந்துள்ளது. 

கொரோனா இரண்டாவது அலை உருவான பிறகு, திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தொடர்ச்சியாக மரணம் அடைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களாக இருந்தவர்கள் உயிரிழந்து வருவது பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் என நகைச்சுவை கதாபாத்திரங்களில் கலக்கிய பலர் தொடர்ச்சியாக உயிரிழந்தனர். அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐயப்பன் கோபி உயிரிழந்தார்.

கடந்த ஏப்ரல் 24-ம் தேதியே இவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் தற்போது தான் இவருடைய மறைவுச் செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் ஐயப்பன் கோபி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web