நடிகை ஜான்வி கபூருக்கே டஃப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்ட மிருணாள் தாகூர்..!!
Apr 7, 2023, 09:05 IST
‘சீதா ராமம்’ படத்தின் மூலமாக துல்கர் சல்மானுக்கு ஜோடியாக, சீதா மகாலெட்சுமியாக நமக்கு நன்கு பரிச்சயமானர் மிருணாள் தாகூர். இந்த பிரபலத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்கு முன்னர் இந்தி, மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் இந்தியில் பல சூப்பர் ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தனது கேலரியில் உள்ள சில புகைப்படங்களை பகிர்ந்துல்ளார். அதில் தான் பயணம் செய்த இடம், பீச்சில் பிகினியில் விளையாடியது, பூவை ரசித்தது. உணவு என பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் பிகினி பிக்ஸ் செம வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், என்ன சீதா இதெல்லாம், அட…. நம்ம சீதாவா இது, என்பது மாதிரியான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

 - cini express.jpg)