சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகியான ’நேஷ்னல் சென்ஷேன்’ நடிகை..!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தேசியளவில் பிரபலமான கதாநாயகியை படக்குழு ஒப்பந்தம் செய்ய முனைப்பு காட்டி வருகிறது.
 
sivakarthikeyan

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘மாவீரன்’ படம் வரும் ஜூலை 14-ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்னும் சில நாட்களில் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிக்கும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

mrunal thakur

இதில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பக்கட்ட ஷூட்டிங் டெல்லியில் துவங்கி நடந்து வருகிறது. மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தேசியளவில் பிரபலமான மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். துல்கார் சல்மான் உடன் இவர் நடித்த சீதா ராமம் படம் பெரியளவில் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web