மீண்டும் வெளியாகும் ‘எம்.எஸ்.தோனி’ திரைப்படம்!

 
1

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த ‘MS Dhoni - The Untold Story' திரைப்படம், வருகிற மே 12ம் தேதி மீண்டும் திரையிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில், தோனி எங்கு சென்றாலும் கிடைக்கிற அமோக வரவேற்பை கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இத்திரைப்படத்தில், சுஷாந்த் சிங் தோனியை போலவே அச்சு அசலாக உடல்மொழி, வசனம் என படத்தில் வாழ்ந்திருப்பார் . மேலும் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி நீரஜ் பாண்டே இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான படம் ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’. கிரிக்கெட்டர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான இதில் திஷா பதானி, கியாரா அத்வானி, அனுபம் கெர், பூமிகா சாவ்லா, கிராந்தி பிரகாஷ், அலோக் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூயோஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வரவேற்பை பெற்றது.


 

From Around the web