பிரபல இசையமைப்பாளர் திடீர் உயிரிழப்பு- ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்..!!
தெலுங்கு சினிமாவில் 1990-களின் ஆரம்பக் கால கட்டத்தில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர்கள் ரா மற்றும் கோட்டி. தமிழில் இவர்கள் ரெண்டு பொண்டாட்டிக்காரன் மற்றும் காவல்காரன் படங்களுக்கு இசையமைப்பாளர்களாக பணியாற்றி உள்ளனர்.
எனினும் அதிகளவில் இருவரும் தெலுங்கு திரையுலகில் தான் நிறைய படங்களுக்கு வொர்க் செய்துள்ளனர். படங்கள் மட்டுமின்றி பல தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்களுக்கும் இவர்கள் இசையமைத்துள்ளனர்.
அவர்களில் இசையமைப்பாளர் ராஜுக்கு கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த தகவலை ஏ.ஆர். ரஹ்மான் தனது இரங்கல் ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இசையமைப்பாளர் ராஜ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், 80களில் ராஜ்-கோடியுடன் பணிபுரிந்த இனிமையான நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது" என பதிவிட்டுள்ளார் அவருடைய மறைவு தெலுங்கு ரசிகர்களை சோகமடையச் செய்துள்ளது.