நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் தோன்றிய இசைஞானி இளையராஜா..!

 
1

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இசையமைப்பாளர்களுள் ஒருவரான இசைஞானி இளையராஜா நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள விளம்பரப்பலகையில் தன்னுடைய விளம்பரத்தை அறிமுகம் செய்துள்ளார்.

சமீபத்தில் பாடல்கள் ஒலிபரப்பு செய்யும் செயலியுடன் இணைந்த இளையராஜா தன்னுடைய பிளேலிஸ்ட்டுகளை விளம்பரப்படுத்தும் வகையில் 3 நிமிட விளம்பரப் படத்தில் நடித்தார்.

தற்போது இந்த விளம்பரப் படத்தின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த (நவம்பர் 19) இந்த விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டது.

இளையராஜா இதுகுறித்த புகைப்படத்தை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ‘இந்த புனிதமான நாளில் இசையின் ராஜா, நியூயார்க்கில் உள்ள பில்போர்ட்ஸ் ஆஃப் டைம் ஸ்கொயர். ராஜா விதிகள்’ என்று பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.


 

From Around the web