முத்தழகு சீரியலில் படுக்கை அறைக் காட்சி- பார்வையாளர்கள் ஷாக்..!!
தற்போது விஜய் டிவி சீரியல்கள் தான் அதிக டி.ஆர்.பி-யை குவித்து வருகின்றன. மாலை நேரங்களுக்கு பிறகு இருக்கும் பெரும்பாலான தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் அதற்கு இணையாக மதிய நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பிரபல அடையவில்லை.
அந்த வரிசையில் விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களில் முத்தழகு சீரியலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. விஜய் டிவியின் வழக்கமான கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு இடையில் எந்தவிதமான ரொமேன்ஸும் நடக்கவில்லை என்கிற ஃபார்மூலா இதிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இதுவரை 500 எபிசோடுகள் கடந்த பின்னும், திருமணம் செய்துகொண்ட ஹீரோ, ஹீரோயின் அப்படியே இருக்கின்றன. இந்த மனநிலையை உடைக்கும் நோக்கில், முத்தழகு சீரியலில் மிகவும் நெருக்கமான முத்தக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
மிகவும் நெருக்கமான வடிவில் எடுக்கப்பட்டுள்ள இந்த முத்தக்காட்சி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தழகு சீரியலில் கதாநாயகனாக ஆஷிஷ் சக்கரவர்த்தியும், கதாநாயகியாக ஷோபனாவும் நடித்து வருகின்றனர்.