பிரதமர் மோடிக்கு என்னுடைய பாராட்டுகள்: ரஜினி!

 
1

543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. மத்தியில் ஆட்சியை பிடிக்க 272 இடங்கள் தேவை. ஆனால் நேற்று எந்த கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்த்தால் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ளன. இதனால் பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் லோக்சபா தேர்தலில் எப்படியாவது பாஜகவை வீழ்த்தி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சி தலைவர்களின் ‛இந்தியா’ கூட்டணி மொத்தம் 234 தொகுதிகளில் வென்றுள்ளது. அதிகபட்சமாக காங்கிரஸ் 99 இடங்களில் வென்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள திமுக தலைமையிலான அணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில்உள்ள 40 தொகுதிகளில் வென்று அசத்தி உள்ளது.

இந்நிலையில் தான் இமயமலை பயணத்தை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். விமானத்தில் சென்னை வந்திறங்கிய நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் லோக்சபா தேர்தல் முடிவுகள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. இதுபற்றி அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்த திமுக கூட்டணி தலைவர் என்னுடைய அருமை நண்பர் முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். அப்படியே என்னுடைய நண்பர் சந்திரபாபுநாயுடு ஆந்திர பிரதேசத்தில் பெரிய வெற்றியடைந்துள்ளார். அவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள். மத்தியில் என்டிஏ 3வது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. 3வது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். அவருக்கு ம் என்னுடைய பாராட்டுகள். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

அதேபோல் முதல்வர் ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் பக்கத்தின் வழியாகவும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

From Around the web