16 வயதில் என் அப்பாவே இதை பண்ணார்.. குண்டை தூக்கி போட்ட குஷ்பூ..!

 
1
 35 ஆண்டுகளுக்கு மேல் முடிசூடாத ராணியாக கொண்டாடப்பட்டவர் நடிகை குஷ்பூ. டைரக்டர் சுந்தர் சியை திருமணம் செய்த அவர், தமிழ்நாட்டு மருமகளாகி விட்டதாக, அவர் திருமணம் செய்த போது பேசப்பட்டது.

முதலில் திமுகவில், பின்பு காங்கிரஸ்சில் இப்போது பாஜகவில் இருக்கிறார் அரசியல்வாதி குஷ்பூ. தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் குஷ்பூ, அவ்வப்போது நேர்காணலில் பங்கேற்று தனது கருத்துகளை, வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற குஷ்பூ தனக்கு இளம் வயதில் தந்தையால் ஏற்பட்ட கொடூர அனுபவம் குறித்தும் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை குஷ்பூ கூறியதாவது, வாழ்க்கையில் அனைவருக்குமே மோசமான தருணங்கள் இருந்திருக்கும். அதை கடந்துதான் வந்திருப்பார்கள். ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் வழங்கப்பட வேண்டிய சம உரிமைகள் மறுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.பெண்களை வக்கிர புத்தியோடு பார்க்கும் ஆண்கள் எங்கேயும் இருக்கவே செய்கின்றனர். பெண்களை இழிவாக பேசினால்தான், நான் சிறந்த ஆண் மகன் என நிரூபிக்க முடியும் என்பது அவர்களது எண்ணமாகவும் இருக்கிறது. அது மிகவும் கேவலமான புத்தி என்பது அவர்களுக்கு புரிவதில்லை. ஆனால் இப்போது காலம் மாறி வருகிறது.

இப்போது ஒரு பெண்ணை கேவலமாக ஒருவர் பேசினால், அந்த பெண்ணுக்கு ஆதரவாக 100 பேர் அந்த இடத்தில் நிற்கிறார்கள். இனிமேல் நாம் கேவலமாக பேசிய நபரை பற்றி நினைக்க வேண்டாம். ஆதரவாக இருப்பவர்களை எப்போதும் நினைத்து பார்ப்போம்.

எதிர்மறையான விஷயங்களிலும், நேர்மறையான விஷயங்களை பார்ப்பதே எப்போதும் நல்லதாக இருக்கும்.

எனக்கு 16 வயது ஆனதில் இருந்து என் தந்தையுடன் நான் நெருங்கிப் பழகவில்லை. அதற்கு பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை. இப்போது அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. அதைப்பற்றி எப்போதும் நான் கவலைப்பட்டதும் கிடையாது.

என் தந்தை என்னிடம் தவறாக நடந்துக்கொண்டது இன்னும் எனது இதயத்தின் ஓரத்தில் இருந்துக்கொண்டே இருக்கிறது. தினமும் காலையில் எழுந்ததும் மனதில் அது ஒரு பாரமாக எனக்குத் தோன்றும். அப்படி பாரமாக உணர்ந்தேன்.ஆனால் இப்போது அப்படி இல்லை. அந்த விஷயத்தை நான் வெளியில் சொல்லி விட்டேன். என்னைப் போலவே இப்படி பாதிக்கப்பட்ட பலரும் வெளியில் சொல்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் நான் இதை செய்தேன்.

பெண்களே உங்களுக்கும் துயரம் நடந்தால் வெளியில் கூறிவிடுங்கள். பெண்களுக்கு 95 சதவீத துன்புறுத்தல்கள், குடும்பத்தில் இருப்பவர்களால்தான் நடக்கும். 5 சதவீதம்தான் வெளிஆட்களால் நிகழும் என்று அதில் ஆவேசமாக கூறியிருக்கிறார் நடிகை குஷ்பூ.

From Around the web