என் தொடை பெருசுதான், அதுதான் எனக்கு அழகு: மிருணாள் தாகூர்!

 
1

நடிகை மிருணாள் தாகூர் ஹிந்தியில் சீரியல் நடிகையாக தன்னுடைய பயணத்தை துவங்கியவர். தொடர்ந்து தெலுங்கு மொழி படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சீதாராமம் படம் மூலம் டோலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மிருணாள். படத்தில் நீண்ட தலைமுடி மற்றும் புடவையில் மிகவும் அழகாக நடித்திருந்தார். அவரது இந்த கெட்டப் தெலுங்கில் மட்டுமில்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. தெலுங்கில் மட்டுமில்லாமல் பான் இந்திய அளவில் இவருக்கு இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்று கொடுத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து அதன் மூலம் தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை அதிகப்படுத்தியுள்ளார் மிருணாள்.

தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த படத்தில் ருக்மிணி வசனம் நடித்து வருகிறார். ஆயினும் காஞ்சனா 4 படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார் மிருணாள் தாகூர். சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டியில் காதல் காட்சிகள் மற்றும் முத்த காட்சிகளில் நடிக்கும்போது அசௌகரியமாக உணர்வதாகவும் அதனால் இத்தகைய காட்சிகள் இருக்கும் படங்களை ஒப்பு கொள்வதில்லை என்றும் கூறியிருந்தார். இதனால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை தான் இழந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் கொடுத்துள்ள மற்றொரு பேட்டியில், தன்னுடைய தொடை மிகவும் பெரிதாக காணப்படுவதாகவும் இதுகுறித்து தான் அடிக்கடி விமர்சனங்களை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து தனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார் மிருணாள் தாகூர். வெளியிடங்களுக்கு செல்லும் போது சிலர் தன்னிடம் இதுகுறித்து கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதான் உன்னுடைய பிரச்சனையா என்று அவர்கள் கேட்கும் நிலையில், இது என்னுடைய பிரச்சினை கிடையாது இதுதான் என்னுடைய அழகு என்று தான் பதிலுக்கு கூறுவேன் என்றும் மிருணாள் தெரிவித்துள்ளார். பார்க்கும் உங்களது பார்வையில் தான் பிரச்சனை உள்ளது என்று தான் தொடர்ந்து பேசுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படங்களில் தன்னை நடிக்க வைக்க இதுவும் காரணம் என்றும் அவர்களிடம் கூறுவேன் என்றும் மிருணாள் தாகூர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.

From Around the web