நயன்தாராவுடன் இணைந்த ’மைனா’ ஹீரோ..!

 
நடிகை நயன்தாரா
புதியதாக நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படத்தில் அவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விதார்த் நடித்து வரும் தகவல் தெரியவந்துள்ளது.

தமிழில் ஹீரோக்களுக்கு இணையான மார்க்கெட்டை வைத்திருப்பவர் நயன்தாரா. அதனால் மூன்றாம் வரிசை கதாநாயகர்களுடன் நடிக்கவும் அவர் தயங்கமாட்டார். கதை நன்றாகவே இருக்க வேண்டும் என்பதே முதல் கட்டளையாக இருக்கும்.

அதற்கு ஐரா, திருநாள், ஆரி, ஹரிஷ் உத்தமன், கதிர்வேலன் காதல் என பல்வேறு படங்கள் எடுத்துக்காட்டாக உள்ளன. இந்த படங்களில் கதைக்கும், படத்தில் நடிக்கும் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் இருக்கும்.

அந்த வரிசையில் கே.இ. ஞானவேல்ராஜா தயாரித்து வரும் புதிய படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். எலி. தெனாலிராமன் போன்ற படங்களை இயக்கி யுவராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் மைனா புகழ் விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் பசங்க படத்தில் நடித்து கவனமீர்த்த நடிகர் ஸ்ரீயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விரைவில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web