கவின் நடிக்கும் படத்துக்கு சர்ச்சையான தலைப்பு கொடுத்த மிஷ்கின்..!!

டாடா படத்தில் மிகவும் பொறுப்புள்ள தந்தையாக நடித்து வெற்றி அடைந்த கவின் அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு மிகவும் சர்ச்சையான தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
kavin

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று முத்திரை பதித்த நடிகர்களின் வரிசையில் கவின் புதியதாக இணைந்துள்ளார். இவருடைய நடிப்பில் வெளியான ‘லிஃப்ட்’ மற்றும் ‘டாடா’ படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றன. அதன்காரணமாக அவர் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் முன்னணி இடத்தில் உள்ளார்.

முன்னதாக லிஃப்ட் திரைப்படம் ஓ.டி.டி தான் வெளியானது. அதற்கு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் போனது ஒரு குறைபாடு தான். ஆனால் டாடா படம் வெளியாகி அண்ட குறையையும் தீர்த்தது வைத்தது. அந்த படத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

இதை அடுத்து கவின் டாஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் நடிக்கிரார். இந்த படத்துக்கு பொருத்தமான டைட்டிலை படக்குழு முடிவு செய்தபோது, அந்த தலைப்பை இயக்குநர் மிஷ்கின் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரிடம் பேசி பார்த்த படக்குழுவிடம் டைட்டிலை தர முடியாது என்று மிஷ்கின் கூறியுள்ளார்

ஆனால் அந்த படத்தின் கதாநாயகன் கவின் தான் என்று தெரிந்ததும், உடனடியாக எந்தவித தயக்கமில்லாமல் தலைப்பை அவர் கொடுத்துவிட்டார். இதனால் திக்குமுக்காடிப் போன படக்குழு மிஷ்கினுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளனர். இவ்வளவு பிரச்னையை கிளப்பும் அந்த தலைப்பு என்ன தெரியுமா? “கிஸ்” என்பதே ஆகும். 

mysskin

தந்தையின் முக்கியத்துவத்தை குறிக்கும் ‘டாடா’ என்கிற படத்தில் நடித்துவிட்டு, இப்படியொரு சர்ச்சையான தலைப்பில் கவின் நடிப்பது, அவருடைய திரைவாழ்க்கைக்கு பிரச்னையாக அமையும் என்கிற கருத்து நிலவுகிறது. ஆனால் அவர் மக்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அறிமுகமானார்.

அதில் அவருடைய காதல் லீலைகளை ஒட்டுமொத்த் தமிழகமுமே பார்த்தது. அதை வைத்து பார்க்கும் போது ‘கிஸ்’ என்கிற தலைப்பு கவினுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

From Around the web