”இது அதுல்ல...” லியோ ப்ரோமோ பாடலை எங்கேயோ கேட்ட மாறி இருக்கா..??

லியோ படத்தின் ’நா ரெடி’ சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதை அடுத்து, அதற்கு ப்ரோமோ வெளியிட்டு படக்குழு உறுதி செய்துள்ளது.
 
leo single

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், சஞ்சய் தத், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில் விஜயின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு, லியோ படத்தின் முதல் சிங்கிள் ‘நா ரெடி’ வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதை உறுதி செய்யும் விதமாக நா ரெடி பாடலுக்கான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த பாடலை நடிகர் விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ளார். அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடலை எழுதியவர் குறித்த விபரங்கள், பாடல் வெளியாகும் போது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோவுக்கு சமூகவலைதளங்களில் வரவேற்பு குவிந்து வருகிறது.

லியோ நா ரெடி ப்ரோமோ பாடல் எங்கேயோ கேட்டது போல இருக்கிறது என்றும், மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங்கை ரீமிக்ஸ் செய்தது போல இருப்பதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர். எனினும் விஜய் ரசிகர்களுக்கு இந்த பாடல் பிடிக்கவே செய்துள்ளது.

From Around the web