சொகுசு காரை வாங்கிய நாச்சியார்புரம் சீரியல் நடிகை..!!
Apr 21, 2023, 07:05 IST
கல்யாணம் முதல் காதல் வரை, ரெக்கக்கட்டி பறக்குது மனசு, சின்னத்தம்பி, நாச்சியார்புரம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ரீமா அசோக்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவரது நடிப்பு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். பன்முக திறமைக் கொண்ட இவர், மேக்கப் ஆர்டிஸ்ட்டாகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில் புதிய கார் ஒன்றை நடிகை ரீமா அசோக் வாங்கியுள்ளார். சொகுசு வகையை சேர்ந்த டாட்டா ஹரியர் என்ற மாடல் கார் வாங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் விலை 20 முதல் 24 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.