இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனா பிடியில் நதியா & குடும்பத்தினர்..!

 
நடிகை நதியா மற்றும் குடும்பத்தினர்

கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் நடிகை நதியா மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நடிகை நதியா தற்போது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார். தாய், தந்தை, கணவர் ஆகியோர் அவருடன் இருக்கின்றனர். சமீபத்தில் இயக்குநர் லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்குப் படத்தில் நடிக்க அவர் கமிட்டானார். படத்திற்கான முதல் ஷெட்யூல் துவங்கப்பட்டது.

ஹைதராபாத்துக்கு வந்து தனக்கான காட்சிகளை நடித்து கொடுத்துள்ளார். மும்பைக்கு திரும்பிய போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அவருடன் வசிக்கும் நதியாவின் தாய், தந்தை, கணவர் மற்றும் வீட்டு பணியாளர்கள் 2 பேர் என அனைவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானாது.

அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸுக்கு இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அப்படி இருந்தும் கொரோனா வந்துவிட்டது. தற்போது மும்பையில் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நலம்பெற்று வரவேண்டும் என ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
 

From Around the web