கமலுக்கு ஜோடியாக முதன்முறையாக நடிக்கும் நதியா..!

 
நதியா

நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக முதன்முறையாக நதியா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் த்ரிஷ்யம் 2. தேசியளவில் இப்படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து பல்வேறு மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்யும் பணிகளை துவங்கினர்.

தமிழில் இப்படத்தின் முதல் பாகம் உருவாக்கப்பட்ட போது, கமல்ஹாசன் கதாநாயகனாகவும் கவுதமி கதாநாயகியாகவும் நடித்தனர். அதற்கு பிறகு கமலுடன் ஏற்படுத்த கருத்துவேறுபாடு காரணமாக கவுதமி அவரை விட்டு பிரிந்தார்.

இதனால் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கவுதமி நடிக்கமாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது. அவருக்கு பதிலகாக மீனா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது த்ரிஷ்யம் 2 தமிழ் ரீமேக்கில் கதாநாயகியாக நதியாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

1980-களில் தமிழ் சினிமாவை கலக்கு கலக்கிய நதியா அப்போது முன்னணியில் இருந்த எல்லா ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். ஆனால் கமலுடன் மட்டும் இதுவரை நடிக்கவில்லை. ஒருவேளை த்ரிஷ்யம் 2 உறுதியானால் கமல் - நதியா ஜோடி ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web