பிரபல நடிகையை டேட்டிங் செய்யும் சமந்தாவின் முன்னாள் கணவர்..!!

சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைத்தன்யா லண்டனில் பிரபல நடிகையுடன் டேட்டிங் சென்றுள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
 
naga chaitanya

தமிழில் ‘மாஸ்கோவின் காவிரி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவர் தெலுங்கு சினிமாவில் கொண்டாடப்படும் நடிகையாக மாறினார். தெலுங்கில் இவர் நடித்த முதல் படம் ‘ஏம் மாய சேஸாவே’. இது தமிழில் வெளிவந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிப்பாகும்.

இந்த படத்தில் இவருடன் இணைந்து நடித்தவர் நாக சைத்தன்யா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறப்பு தோற்றில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து சமந்தாவும் நாகசைத்தன்யாவும் ‘ஆட்டோநகர் சூர்யா’ என்கிற படத்தில் நடித்தனர். அப்போது இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது.

Naga Chaitanya

சில ஆண்டுகள் டேட்டிங் செய்த இருவரும் ‘மனம்’ என்கிற படத்தில் இணைந்து நடித்த போது, திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் கோவாவில் திருமணம் செய்துகொண்டனர். தொடர்ந்து சமந்தா திரைப்படங்களில் நடித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இணைந்து ‘மஜிலி’ என்கிற படத்தில் கணவன் மனைவியாக நடித்தனர். அதை தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021-ம் ஆண்டு சட்டப்படி அவர்கள் விவகாரத்து பெற்றனர். இது தென்னிந்திய சினிமாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனினும் திருமண முறிவுக்கு பிறகான சமந்தாவின் திரைப்பயணம் வெற்றிகரமாகவே உள்ளது. ஆனால் நாக சைத்தன்யாவுக்கு தான் அடி மேல் அடி. தொடர் தோல்விகள், பெரியளவில் வாய்ப்பு கிடையாது. அவர் இந்தியில் நடித்த ‘லால் சிங் சத்தா’ படமும் படுதோல்வி அடைந்தது. இதனால் அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

naga chaitanya

இந்நிலையில் அவர் நடிகை சோபிதா தூலிபாலாவை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இருவரும் சேர்ந்து ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களில் இணைந்து ஊர் சுற்றுவதாக கூறப்படுகிறது. இப்போது லண்டனில் இருவரும் டேட்டிங் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

சமீபத்தில் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் ஒருவரும் உணவருந்தச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சமையலர் நாக சைத்தன்யாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அவருக்கு பின்னே நடிகை சோபிதா தூளிபாலா இருப்பது புகைப்படத்தில் இருக்கிறது. இதன்மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
 

From Around the web