Custoday Teaser: நீருக்கடியில் அப்டேட் கொடுத்த நாக சைத்தன்யா மற்றும் வெங்கட் பிரபு..!!

நாகசைத்தன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி நடித்து வரும் ‘கஸ்டடி’ படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது. புதுமையான முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
naga chaitanya

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா நடித்து வரும் கஸ்டடி படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை புதுமையான முறையில் படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான நாகர்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யா, இன்னும் சினிமாவில் தனக்கான இடம் கிடைக்க போராடி வருகிறார். தமிழில் கவுதம் மேனன் நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து இருந்தார். எனினும் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்தாண்டு இவருடைய நடிப்பில் பங்கரராஜூ, தேங்க்யூ, லால் சிங் சத்தா ஆகிய 3 படங்கள் வெளியான. இவை மூன்றுமே தோல்விப் படங்களாக அமைந்தன. இதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘கஸ்டடி’ படத்தை பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்.

Venkat prabhu

இந்த படத்தில் நாக சைத்தன்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மிகவும் விறுவிறுப்பாக நடித்து வரும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது. தெலுங்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படத்தின் டீசர் அப்டேட் வெளிவந்துள்ளது.

அதற்காக வீடியோ வெளியிட்டுள்ள படக்குழு, நாக சைதன்யா நீருக்கடியில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தின் கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கஸ்டடி படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டீசர் வெளியீட்டின் போது, படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web