’உஷ்’ சொன்ன நாக சைதன்யா; நிருபரை திட்டிய சமந்தா..!

 
நாக சைதன்யா மற்றும் சமந்தா
வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சமந்தா இடையே பிரிவு ஏற்படுவது உறுதி என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருப்பதி கோயிலில் வழிபாடு நடத்த நடிகை சமந்தா சென்றார். தரிசனம் முடிந்து திரும்பிய அவரிடம் நிருபர் ஒருவர் ”நாக சைதன்யாவை பிரிகிறீர்களா..?” என்ற கேள்வியை கேட்டார். இதனால் கோபமடைந்த சமந்தா, “அறிவில்லையா. கோயிலுக்கு வந்தால் இப்படியா கேட்பீர்கள்..?” என்று கடும் கோபமாக திட்டினார்.

அதை தொடர்ந்து நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள ‘லவ் ஸ்டோரி’ படம் விரைவில் வெளிவரவுள்ளது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நடிகர் நாக சைதன்யா பங்கேற்றார். நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாகவே சமந்தா குறித்த கேள்வி கேட்க வேண்டாம் என செய்தியாளர்களிடம் அவர் கேட்டுகொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நடைபெற்றுள்ள இந்த இருவேறு சம்பவங்கள் காரணமாக, நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரிடையே விவகாரத்து ஏற்படுவது உறுதியாக தெரிவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இது அவர்களுடைய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web