முதியவரை இழுத்து வீசிய நாகர்ஜுனாவின் பாதுகாவலர்..! மன்னிப்பு கேட்ட நாகார்ஜூனா..! 

 
1

குபேரா படத்தின் ஷூட்டிங்கிற்காக நாகர்ஜுனா  ஏர்போர்ட்டில் இருந்து வந்ந்தார். அப்போது  நாகர்ஜுனா வரும் போது வயது முதிர்ந்த ரசிகர் ஒருவர் அவர் அருகில் செல்ல,  நாகர்ஜுனாவின் பாதுகாவலர் அந்த முதியவரை இழுத்து கீழே தள்ளி விடுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த முதியவர் அருகில் வரும்போது அவரை பார்த்தும் பார்க்காதது போல நாகர்ஜுனா நிற்காமல் செல்ல, அவருக்கு பின்னால் வந்த தனுஷும் இதை கண்டு கொள்ளவில்லை.

இதன்போது நாகர்ஜுனாவின் பாதுகாவலர் குறித்த முதியவரை தள்ளிவிட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி நாகர்ஜுனாவை வறுத்தெடுத்து வருகின்றார்கள்.

எனினும், இந்த வீடியோ வைரலான நிலையில், இதை பார்த்த  நாகர்ஜுனா அவரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் இனிமேல் இப்படி நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.


 

From Around the web