நாகேஷ், சிம்ரனுடன் நடித்துள்ள ஏ.ஆர். முருகதாஸ்- அவரே வெளியிட்ட வைரல் வீடியோ...!!
 

 
ஏ.ஆர். முருகதாஸ்

தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி இயக்குநராக இருக்கும் ஏ.ஆர். முருகதாஸ், மறைந்த நடிகர் நாகேஷுடன் இணைந்து நடித்துள்ள காட்சியை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அஜித் நாயகனாக நடித்த ‘தீனா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். அதை தொடர்ந்து ரமணா, கஜினி, கத்தி என அடுத்தடுத்து பெரிய படங்களை இயக்கி ஹிட் கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறினார்.

இவர் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவ்வாறு நாகேஷுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்த காட்சியை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வைரல் செய்து வருகின்றனர்.

கடந்த 1997-ம் ஆண்டு உதய்குமார் என்பவருடைய இயக்கத்தில் வெளியான படன் ‘பூச்சூடவா’. அப்பாஸ், சிம்ரன் இருவரும் இணைந்து நடித்த இந்த படத்தில் நாகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அப்போது நாகேஷ் மற்றும் சிம்ரன் நடித்த காட்சியில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சில நிமிடங்கள் சர்வராக வந்து போகிறார். மிகவும் காமெடியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த காட்சியை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து தனக்கு நடிக்கவும் தெரியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

From Around the web