நீண்ட இடைவேளைக்கு பிறகு புதிய படத்தில் கமிட்டான நகுல்..!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் நகுல் புதியதாக நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 
 
nakul

பாய்ஸ் படம் நடிகராக அறிமுகான நகுல், நடிகை தேவயானியின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். அந்த படத்தை தொடர்ந்து படங்களில் நடிக்காமல் பாடல்கள் பாடி வந்தார். கஜினி படத்தில் எக்ஸ் மச்சி ஒய் மச்சி, அந்நியன் படத்தில் ரெமோ உள்ளிட்ட படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார்.

இதையடுத்து காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். அதற்கு பிறகு மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்தார். குறிப்பிட்ட சில படங்களில் அவருடைய நடிப்பு பாராட்டுக்களை பெற்றது.

எனினும் படங்கள் பெரியளவில் வெற்றி அடையவில்லை. அண்மைக் காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நகுல், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தில் நடிக்கிறார். டி3 படத்தின் இயக்குநர் பாலாஜி இயக்கும் புதிய படத்தில் நகுல் நடிக்கிறார்.

nirka atharku thaga

படத்துக்கு நிற்க அதற்கு தக என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. ஏ.ஜி. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கான ஷூட்டிங் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது.
 

From Around the web