விஜய் பற்றி பேசிய நாளைய தீர்ப்பு நாயகி..! என்ன சொன்னார் தெரியுமா ? 

 
1

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் அக்டோபர் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவலின்படி இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தான் வெளியாகும் என தெரிகின்றது.

இருப்பினும் இதைப்பற்றி தற்போது வரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் விஜய் ஜனநாயகன் படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலக இருக்கும் நிலையில் அவரின் முதல் பட நாயகி கீர்த்தனா சமீபத்தில் விஜய்யை பற்றி பேசியிருக்கிறார். விஜய் தன் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தனா நடித்திருந்தார். அவருக்கும் அது முதல் படம் தான். அதன் பிறகு கீர்த்தனா தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பல படங்களில் நடித்து வந்தார். அதைத்தொடர்ந்து தற்போது டிவி தொடர்களிலும் நடித்து வருகின்றார் கீர்த்தனா.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கீர்த்தனா பேசுகையில், விஜய்யின் வளர்ச்சியை பார்த்து இவருடன் நான் நடித்துள்ளேன் என நினைக்கும்போது எனக்கு சந்தோஷமா இருக்கு. ஆனால் அவர் நடிப்பில் இருந்து விலகுகிறார் என்ற செய்தி எனக்கு கவலையாக இருக்கு. அவருடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கலாம் என ஆசைப்பட்டேன். ஆனால் அவர் தற்போது நடிப்பில் இருந்து விலக இருக்கின்றார் என்பதை நினைத்து கவலையாக இருக்கின்றது என்றார் கீர்த்தனா.

இந்நிலையில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு முதலில் நாளைய தீர்ப்பு என்ற டைட்டில் தான் வைக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டது. விஜய்யின் முதல் பட தலைப்பையே அவரின் கடைசி படத்திற்கும் வைத்தால் நன்றாக இருக்கும் என பலர் கூறினார்கள். ஆனால் விஜய்யின் கடைசி படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஜனநாயகன் படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிடலாமா என்ற யோசனையில் படக்குழு உள்ளதாம்.

From Around the web