மிஷ்கின் படத்தில் நமீதா..! அப்போ அவர்தான் பேயா..?

 
பிசாசு 2

மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் ஏற்கனவே ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், மற்றொரு கதாநாயகி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. ஆனால் முதல் பாகத்துக்கும், இதற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று மிஷ்கின் ஏற்கனவே கூறவிட்டார்.

இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சீரியல் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முன்னதாக சைக்கோ படத்தின் போது மிஷ்கின் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பும் எதுவும் உறுதிசெய்யவில்லை. எனினும் பிசாசு 2 படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, மோதல் குறித்த தகவலை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது.

From Around the web