நமீதாவிடம் கடுமையாக நடந்த கோவில் நிர்வாகம்!
தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய நாட்களுக்குள்ளையே ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்தவர் நடிகை நமீதா.அதன் பின்பு விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
2017 ஆம் ஆண்டு தனது காதலர் ஆன வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததை தொடர்ந்து வெளியில் தலை காட்டாமல் இருந்தார். தற்போது மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் களம் இறங்கி உள்ளார்.
இந்த நிலையில், தற்போது நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதாவது இன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்திக்காக அனைத்து கிருஷ்ணர் கோயிலுக்கும் சென்ற நமீதா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்றுள்ளார். இதன் போது அங்கிருந்த அதிகாரி ஒருவர் நமீதாவிடம் நீங்கள் இந்துவா? என்ன சாதி ?எனக் கேட்டுள்ளார். அதற்கான சான்றுகள் இருக்கா என்றும் கேட்டு தன் கணவரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார் என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மேலும் நான் ஒரு இந்து என்பது அனைவருக்கும் தெரியும். எனது திருமணம் திருப்பதியில் நடந்தது. குழந்தைகளுக்கும் கிருஷ்ணா ஆதித்யா மற்றும் சியான்ராஜ் என கிருஷ்ணரின் பெயரை தான் வைத்துள்ளேன். கோவில்களில் இப்படி நடப்பது வருத்தமாக உள்ளது.
நான் பல கோவிலுக்கு சென்ற போதும் எந்த கோவிலிலும் இப்படி என்னிடம் கேட்டது இல்லை. ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அதிகாரி ஒருவர் என்னை உள்ளே அனுமதிக்காமல் நிறுத்தி வைத்து கடுமையாக நடந்து கொண்டார். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.