அதற்குள் சீரியலுக்கு வந்த நந்திதா- வருத்தத்தில் கோலிவுட்..!
 

 
நடிகை நந்திதா ஸ்வேதா

தமிழ், கன்னட படங்களில் நடித்து புகழடைந்த நந்திதா ஸ்வேதா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடிப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அட்டக்கத்தி படம் மூலம் கவனமீர்த்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதை தொடர்ந்து முண்டாசுப்பட்டி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வில்லத்தனமான அவருடைய நடிப்பு பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில் சன் டிவியில் மாலையில் ஒளிப்பரப்பாகி வரும் ‘அபியும் நானும்’ சீரியலில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் நந்திதா. எதற்காக அதற்குள் இவர் சீரியலுக்கு வரவேண்டும் என்பது தெரியவில்லை.

எனினும் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் அவர் நாடகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நந்திதா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web