’நானே வருவேன்’ தலைப்பு மாற்றம்- தனுஷ் மீது செம கடுப்பில் செல்வராகவன்..!

 
நானே வருவேன்

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ’நானே வருவேன்’ படத்தின் தலைப்பு திடீரென மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் தயாராகி வரும் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார் நடிகர் தனுஷ். முதலாவதாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘டி 43’ படத்தில் நடித்து வருகிறார். இதனுடைய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

அதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ள ‘நானே வருவேன்’ படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார் தனுஷ். இப்படத்தை அவருடைய அண்ணனும், தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரான செல்வராகவன் இயக்கவுள்ளார்.

ஏற்கனவே படத்தில் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுவிட்டன. இந்நிலையில் தனுஷுக்கு பிடிக்காததால் ‘நானே வருவேன்’ படத்தின் தலைப்பு மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செல்வராகவன் தம்பி தனுஷ் மீது கடும் கோபத்தில் உள்ளாராம்.

ஆனால் இந்த தகவலை படக்குழு தரப்பில் இருந்து உறுதி செய்யவில்லை. ஒருவேளை புதிய டைட்டில் வைக்கப்பட்டால் அதற்கேற்றவாறு போஸ்டர் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டு 20-ம் தேதி முதல் துவங்குகிறது.
 

From Around the web