நானியின் பிளாக்பஸ்டர் படம் விரைவில் ஓடிடியில் ..!! 

 
1

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் கடந்த மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘தசரா’. இதில் கீர்த்தி சுரேஷ், தீக்‌ஷித் ஷெட்டி, பிரகாஷ் ராஜ், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரகனி, பூர்ணா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.

மேலும், ஓடிடியில் எப்போது வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பும் இருந்தது. இதையடுத்து, தசரா படத்தின் ஓடிடி வெளியீடு இம்மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். 

இந்நிலையில், படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்பிளிக்ஸில் வரும் ஏப். 27ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தசரா தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உட்பட 4 மொழிகளில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

From Around the web