விரைவில் ஓடிடியில் வெளியாகிறது நானியின் படம்..! 

 
1

சீதா ராமம் புகழ் நடிகை மிருணாள் மற்றும் நேச்சுரல் ஸ்டார் நானி  நடித்த ஹாய் நான்னா திரைப்படம் இந்த மாதம் 7ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியானது. தெலுங்கில் நல்ல வரவேற்பு பெற்ற அந்த திரைப்படமும் வெள்ள பாதிப்புகளால் தமிழ்நாட்டில் சரியாக ஓடவில்லை.

நானி மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் தந்தை பாசம், காதல் என எமோஷன்களின் கலவையாக வெளியான ஹாய் நான்னா திரைப்படம் ஃபீல் குட் மூவி என கொண்டாடப்பட்டது. தென்னிந்திய திரைப்படங்கள் 4 வாரங்களில் OTTக்கு வந்து விடும் நிலையில், ரசிகர்கள் வெயிட் பண்ணி ஓடிடியிலேயே பார்த்து விடும் நிலை உருவாகி உள்ளது.

வரும் ஜனவரி 4ம் தேதி நெட்பிளிக்ஸ் OTTயில் ஹாய் நான்னா திரைப்படம் வெளியாக உள்ளது. அதன் அறிவிப்பை நெட்பிளிக்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.


 


 

From Around the web