பொறுத்து பொறுத்து வெறுத்துப் போன படக்குழு- நாரப்பா படக்குழு திடீர் முடிவு..!

 
நாரப்பா படம்

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், ஓடிடி-யில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெளியான அசுரன் படம் விமர்சகர்கள் வட்டத்திலும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும், இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாக வென்றார் தனுஷ்.

இப்படம் தெலுங்கில் ‘நாரப்பா’ என்கிற பெயரில் தயாராகியுள்ளது. வெங்கடேஷ், ப்ரியாமணி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல மாதங்களுக்கு முன்பாகவே படத்தின் உருவாக்கப் பணிகள் முடிந்துவிட்ட போதிலும், கொரோனா காரணமாக வெளியிட முடியவில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த படக்குழு தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விரைவில் ஓடிடியில் நாரப்பா படம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெங்கடேஷ் மீனா நடித்துள்ள ‘த்ரிஷ்யம் 2’ படமும் ஓடிடி யில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web