’நாயகன் ‘ கார்த்திகாவை நினைவுள்ளதா? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க..!!
கேரளாவைச் சேர்ந்த நடிகை சுனதா, தமிழ் சினிமாவில் கார்த்திகா என்கிற பெயரில் அறிமுகமானார். இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் கார்த்திகாவுக்கு தனித்த அடையாளத்தை பெற்றுத் தந்த படம் ‘நாயகன்’ ஆகும்.
கமல்ஹாசனுக்கு இணையான கதாபாத்திர வடிவமைப்புடன், அந்த படத்தில் கார்த்திகா நடித்திருந்தார். எனினும், தமிழ் மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அமையாயததால் 1988-ம் ஆண்டு சுனில் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு கேரளாவில் செட்டிலாகிவிட்டார்.
இந்த தம்பதிக்கு விஷ்ணு சுனில் ஜெயக்குமார் என்கிற மகன் உள்ளார். கால்நடை மருத்துவராக பணியாற்றி வரும் இவருக்கு 2020-ம் ஆண்டு பூஜா என்பவருடன் கேரளாவில் திருமணம் நடந்தது. அவர்களுக்கு இப்போது இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
நடிகை கார்த்திகா கணவர், மகன் மற்றும் பேரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் ‘நாயகன்’ கார்த்திகாவா இது என்று ஆச்சரிய கேள்வியை எழுப்பி வருகின்றனர்.