கல்கி படக்குழுவுக்கு நயன் நன்றி…!

 
1

பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படம் கல்கி 2898ஏடி. இத்திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றவர் ஆவார். கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த இத்திரைப்படம் தேசிய விருதுகளை வென்றது. இந்நிலையில், தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தான் கல்கி. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்

வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. படத்தில் நாயகனாக நடித்துள்ள பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு உதவும் நண்பராக புஜ்ஜி என்ற ரோபோ கார் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் கொடுத்துள்ளார். இதன் அறிமுக விழா ஐதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

கல்கி திரைப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் முன்னோட்டம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் புரமோசனையும் படக்குழுதீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி, காமிக் புத்தகம், மற்றும் பொம்மைகள் அடங்கிய புஜ்ஜி பரிசுப்பெட்டி திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, மகேஷ்பாபு மகள் சித்தாரா, ராம்சரணின் மகள் கிலின் காரா ஆகியோருக்கு பரிசுப்பெட்டி அனுப்பப்பட்டது. இந்நிலையில், தற்போது நயன்தாராவின் உயிர் மற்றும் உலக் இருவருக்கும் புஜ்ஜி கார் பரிசுப்பெட்டியை கல்கி படக்குழு அனுப்பி வைத்துள்ளது. இதற்கு நயன்தாராவும் நன்றி தெரிவித்துள்ளார்.

From Around the web