இறுதியில் ஓடிடியில் வெளியாகும் நயன் - விக்கி திருமணம்..!
நயன்தாரா தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் இருந்து வருகிறார். முதன்முதலாக 2005 ஆம் ஆண்டு சரத்குமாருடன் ஐயா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனை அடுத்து தொடர்ந்து 19 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரை உலகின் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார்.
முதல் படத்தைத் தொடர்ந்து உடனே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வந்தார். அதனை அடுத்து காதல் உறவில் ஏற்பட்ட தோல்வியை தைரியமாக எதிர்கொண்டு மீண்டும் தொழில் ரீதியாக சாதிக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து படம் எடுக்கும் பாணியும் நயன்தாராவல் தான் ஆரம்பிக்க தொடங்கியது.
முதன் முதலாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2015ஆம் அண்டு , ‘நானும் ரெளடிதான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். அப்படத்தின் படப்பிடிப்பின் போதே விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்டார். சில ஆண்டுகள் ரகசியமாக இருந்த இவர்களது காதலை சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக அறிவித்தனர். தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2022 திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வாடகைத் தை மூலம் இரு குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். இரட்டை ஆண் குழந்தைகளுக்கான அவர்களுக்கு உயிர்-உலக் எனப் பெயரிட்டனர். திருமணம் நடந்து 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது இவர்களின் திருமண வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு இந்திய திரையுலகமே வந்து இருந்தது. ஷாருக்கான் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி வரை முழுவதும் பெரிய ஸ்டார்கள் கூடிய இந்த திருமண நிகழ்வை பார்க்க வேண்டும் என ரசிகர்களும் ஆவலாக இருந்தனர். இந்நிலையில் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அது போலவே, அந்த வீடியோவின் டிரைலரை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டது. ஆனால் அந்த டிரைலரோடு அந்த அறிவிப்பு நின்று விட்டது. அறிவிப்பின் படி அதில் கூறிய தேதியில் வீடியோ வெளியாகவில்லை. இதனையடுத்து இதற்கு காரணம் அந்த நெட்ஃப்ளிக்ஸ் தளம், நயன்தாராவின் திருமண புகைப்படங்களை எங்கும் பதிவிடக்கூடாது என கேட்டுக்காெண்டதாகவும், இதற்கு மாறாக பல புகைப்படங்களை இவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. இதனால், திருமண வீடியாேவின் ஓடிடி ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் வரும் தீபாவளி அன்று அவர்களது திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
#Nayanthara and @VigneshShivN marriage documentary titled “NAYANTHARA - Beyond the Fairy Tale” will finally stream soon on #Netflix.
— Sreedhar Pillai (@sri50) October 8, 2024
Duration - 1hr 21mins. pic.twitter.com/eXAxdlulUH
#Nayanthara and @VigneshShivN marriage documentary titled “NAYANTHARA - Beyond the Fairy Tale” will finally stream soon on #Netflix.
— Sreedhar Pillai (@sri50) October 8, 2024
Duration - 1hr 21mins. pic.twitter.com/eXAxdlulUH