வலுவான கூட்டணியுடன் களமிறங்கும் நயன்தாரா- நயன்தாரா 75 அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் பல்வேறு பின்னடவைச் சந்தித்து வரும் நயன்தாராவுக்கு தற்போது முத்தாய்ப்பாக அவருடைய 75-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
nayanthara

இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு, நயன்தாராவுக்கு தொழில்முறை வாழ்க்கை அவ்வளவு வெற்றிகரமாக அமையவில்லை. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்துடன், அவர் நடிக்க வேண்டிய படத்தில் ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த படம் தான் ரெயின்போ. மேலும் அவருடைய 75-வது படமாக தயாரிக்கப்பட இருந்த ‘அன்னபூரணி’ என்கிற பட வேலைகள் அறிவிக்கப்படாமலேயே இருக்கிறது.

இதேநிலை விக்னேஷ் சிவனுக்கும் பொருந்தும் என்று கூறலாம். கடந்தாண்டு லைகாவுடன் மேற்கொள்ளப்பட்ட அஜித் 62 பட ஒப்பந்தம், நடப்பாண்டில் கையைவிட்டு போனது. இன்னும் எந்தவொரு புதிய படத்தை அவர் கமிட் செய்யாமல் இருக்கிறார். அதனால் இருவரும் திருமணத்துக்கு பிறகு தொழில்முறையில் பின்னிடவைச் சந்தித்து வருவதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது.


நடப்பாண்டில் நயன்தாரா புதிய படத்தை கமிட் செய்துள்ளார். இது அவருடைய 75-வது படமாக தயாராகவுள்ளது. தனக்கு திரையுலகில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை கருதி, படக்குழுவை அவர் தேர்வுசெய்துள்ளதாக தெரிகிறது. நயன்தாராவின் 75-வது படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை மார்ச் மாதம் நடந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ‘அன்னபூரணி’ படம் தான் நயன்தாரா 75-யா என்பது தெரியாது.

ஆனால் படத்தின் தலைப்பை அறிவிப்பதற்கு முன்னதாக, நயன்தாரா 75 படக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். அண்மையில் இவருடைய இசையில் வெளியான ’வாரிசு’ படம் பிரமாண்டமான வரவேற்பை பெற்றது. 

படத்தொகுப்பாளராக பிரவீன் ஆண்டனி, கலை அரங்கப் பணிகளை துரைராஜ், ஒளிப்பதிவாளராக சந்த்ய சூரியன் என கோலிவுட் சினிமாவின் முதன்மையான டெக்னீஷியன்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 
 

From Around the web