நயன்தாராவின் தந்தைக்கு உடல்நலக்குறைவு- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி..!
 

 
தந்தையுடன் நயன்தாரா

நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு உடல்நலக்குறைவால் கேரளாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை 6 வருடங்களாக காதலித்து வருகிறார். எனினும் இன்னும் இருவரும் திருமணம் குறித்த முடிவை அறிவிக்கவில்லை.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சமயத்தில் அவர்கள் இருவரும் தனி விமானம் மூலம் கொச்சி சென்றடைந்தனர். நயன்தாராவின் குடும்பத்தினர் அங்கு வசிப்பதால் அவர்கள் சென்றதாக முன்னர் கருதப்பட்டது.

ஆனால் சமீபத்தில் கிடைத்த தகவலின்படி நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை நலம் விசாரிப்பதற்காகவே இருவரும் கொச்சி சென்ற விபரம் தெரியவந்தது.

இந்நிலையில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விபரம் தெரியவந்துள்ளது. தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக ஊரடங்கு சமயத்தில் நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் கொச்சி சென்ற போது, மகள் நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளார் குரியன். இதனால் விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web