கோலாகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி..!
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழிகளில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா. அதே சமயம் தன் கணவர், குழந்தைகளுடனும் நேரம் செலவிட்டு வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு நான்கு மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என்று பெயரிட்டனர்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் குழந்தைகளின் முகத்தை காட்டாமல் இருந்தனர். குழந்தைகள் பிறந்து ஒரு வருடங்கள் கடந்தபோது, குழந்தைகளின் முகத்தை வெளிக்காட்டினர். தொடர்ந்து, இரட்டை மகன்களுடன் இருவருமே வீடியோ வெளியிட்டு வந்தனர். இதற்கிடையில் நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அன்னபூரணி. நிலேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் ஜெய், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து டியூட் விக்கி இயக்கத்தில் மண்ணாங்கட்டி படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன், இரட்டை மகன்கள் மற்றும் அம்மாவுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளார். இது தொடர்பானபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.