புதிய தொழில் துவங்கும் நயன் - விக்னேஷ் சிவன் ஜோடி: நல்ல வருமானம் ஆச்சே..!!
திரைத்துறையில் இருக்கும் பலரும் பல்வேறு தொழில், வணிகம் மற்றும் சேவை சார்ந்த செயல்பாடுகளில் முதலீடு செய்வது வழக்கம். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி சகோதரர்கள் மின்சார உற்பத்தி, ஏற்றுமதி - இறக்குமதி உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடு செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக சூர்யா மும்பை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் டெண்டரை சொந்தமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோன்று நடிகை காஜல் அகர்வால் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளார். நடிகர்கள் விஜய் மற்றும் ரஜினிகாந்த் திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் முதலீடு செய்துள்ளனர். நடிகை சமந்தா ஆடை தயாரிப்பு நிறுவனங்களிலும், ஸ்நேகா அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தியிலும் அதிகளவு முடிவு செய்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் மூன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்துள்ளனர். மும்பையின் பிரபலமான சாய்வாலா, அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் தி லிப் பாம் கம்பெனி, இறைச்சி விற்பனையில் வளர்ந்து வரும் ஃபிபோலா போன்ற நிறுவனங்களில் அவர்கள் முதலீடு செய்துள்ளனர்.

இந்த வரிசையில் இருவரும் ரியல் எஸ்டேட் துறையில் கால்பதிக்கின்றனர். நயன்தாராவின் சொந்த மாநிலமான கேரளாவில் குறிப்பிட்ட பகுதிகளை தேர்வு செய்து அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்ய உள்ளனராம். அந்த நிறுவனம் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அதை தமிழகத்திலும் துவங்கிட இருவரும் முடிவு செய்துள்ளனராம்.
 - cini express.jpg)