இரண்டு குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஹாங்காங் சுற்றுப்பயணம்..!

 
1

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மாஸ் காட்டிவந்த இவர், அட்லீ இயக்கத்தில் அண்மையில் வெளியான ஜவான் படத்தில் உளவு பிரிவு அதிகாரியாக நடித்திருந்தார். ஷாருக்கானுடன் ஜோடி போட்டு நயன்தாரா நடித்த முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தை அடுத்து நயன்தாரா கடைசியாக அன்னபூரணி: தி காடஸ் ஆஃப் ஃபுட் படத்தில் நடித்தார். நீலேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் ஜெய், சத்யராஜ் மற்றும் அச்யுத் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கும் கலவையான விமர்சனங்கள் வந்தன படம் மிகப்பெரிய அளவில் பெற்று பெற்றது.

தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலகுடன் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். திரைத்துறையில் பிஸியாக இருந்தாலும், இருவரும் அவ்வப்போது குடும்பத்திற்காகவும் தங்களது பிள்ளைகளுக்காகவும் நேரம் ஒதுக்கி வருகின்றனர். அந்த வகையில், நயன் விக்கி தம்பதி தங்களது குழந்தைகளுடன் ஹாங்காங் சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். இதில் நேற்று, நீருக்கடியில் உயிரியல் பூங்காவில் தனது மகன்களான உலக் மற்றும் உயிர் விளையாடும் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

தற்போது, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது குடும்பத்தோடு டிஸ்னி வேர்ல்டில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் உயிர், உலக் மற்றும் நயன்தாரா மூவரும் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து இருக்கிறார்கள். இந்த போட்டோவிற்கு கேப்ஷனாக, போடா போடி ஷூட்டிங்கிற்கு அனுமதி கேட்டு 12 வருடங்களுக்கு முன் செருப்பு மற்றும் கையில் 1000 ரூபாய் பணத்துடன் இங்கே வந்தேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

From Around the web