பிரபல குளிர்பானம் பிராண்ட் அம்பாசிடராக நயன்தாரா நியமனம்..!

 
1

நடிகை நயன்தாரா சினிமாவில் யாரும் அசைக்க முடியாத உச்சத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக தென்னிந்தியாவை வளம் வந்ததோடு மட்டுமல்லாமல் 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார்.நடிகைகள் என்றாலே ஆண் ரசிகர்களின் கூட்டம் தான் அதிகமாக இருக்கும்.அதை தகர்க்கும் வகையில் பெண் ரசிகைகள் அதிகம் கொண்ட நடிகையாக மாறினார் நயன்தாரா. தான் நடிப்பில் மட்டும் சிறந்தவர்கள் அல்ல தொழிலதிபராகவும் மாறமுடியும் என மாறி வருகிறார்.

சினிமாவில் வெற்றி கண்ட நயன்தாரா தொழிலதிபராகவும் மாறி வருகிறார். சமீபத்தில் Femi9 எனும் புதிய வகை பிராண்ட் சானிட்டரி நாப்கினை அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில், அந்த சானிட்டரி நாப்கினை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர்களை பாராட்டி நடத்தப்பட்ட விழாவில் நடிகை நயன்தாராவின் உரை அவரது ரசிகைகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தது.

கோலிவுட்டில் பேசப்படும் ஜோடியாக வலம் நயன்தாரா விக்னேஷிவன் பிரிந்து விட்டதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் போது தற்போது நடிகை நயன்தாரா 'SLICE' பிராண்ட் அம்பாசிடர் ஆக கையெழுத்திட்டுள்ளதாக அவரே தன்னுடைய 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நடிகை நயன்தாரா தான் SLICE விளம்பரத்தில் நடித்துள்ளதாக கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டு கம்மிங் சூன் என பதிவிட்டுள்ளார்.


 


 

From Around the web