அண்ணாச்சிக்கு அம்மாவாக நடிக்க நயன்தாராவுக்கு தேடி வந்த வாய்ப்பு..!!

லெஜெண்டு படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்துள்ளது. ஆனால் அவர் திட்டவட்டமாக நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 
 
nayanthara

ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘லெஜண்டு’. இந்த படத்தின் பிரபல சரவண ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் ஊர்வசி ரவுதலா, கீதிகா திவாரி, மறைந்த நடிகர் விவேக், சுமன் மற்றும் நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

இந்த படத்தில் முன்னதாக கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஜேடி மற்றும் ஜெர்ரி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் லெஜெண்டு படத்தில் நயன்தாரா நடிப்பதாக வெளியான செய்தி குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.

saravanan arul

அதற்கு பதிலளித்த இரட்டை இயக்குநர்கள், லெஜெண்டு படத்தின் நயன்தாராவை நடிக்கக் கேட்டது உண்மை தான். ஆனால் கதாநாயகியாக நடிப்பதற்கு கிடையாது. மற்றொரு முக்கியமான ரோலில் அவரை நடிக்கக் கேட்டோம். ஆனால் நடக்கவில்லை என்று கூறினர்.

இந்நிலையில் லெஜெண்டு படத்தில் கதாநாயகன் சரவணன் அருளின் இளம் தாயார் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு நயன்தாராவை  அணுகியுள்ள விபரம் தற்போது தெரியவந்துள்ளது. ஃபிளாஷ்பேக்கில் வரக்கூடிய அவருடைய கதாபாத்திரத்திற்கு வலுவான திரைக்கதை எழுதப்பட்டு இருந்தது. ஆனால் அவர் படத்தில் நடிக்க மறுத்ததால், அப்பகுதி கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
 

From Around the web